search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலையாளி பரசுராம் வாக்மரே"

    கர்நாடகாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது பரசுராம் வாக்மரே என சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர். #GauriLankesh #ParashuramWaghmare
    பெங்களூரு:

    பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி  ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரது வீட்டு சிசிடிவி கேமராவில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த கொலை வழக்கை கர்நாடக உளவுப் பிரிவு ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.



    கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரின் உருவப்படங்களை வெளியிட்டனர். மேலும், சிவமோகாவைச் சேர்ந்த நவீன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, இந்த கொலையில் தொடர்புடைய பரசுராம் வாக்மரே என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது பரசுராம் வாக்மாரே என சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்தனர். #GauriLankesh

    இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் கூறுகையில், கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது பரசுராம் வாக்மரே தான். துப்பாக்கியில் பதிந்துள்ள ரேகையை சோதனை செய்ததில் தடயவியல் துறை இதனை உறுதி செய்துள்ளது. இதே துப்பாக்கியால்தான் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதும் உறுதியாகி உள்ளது என தெரிவித்தனர். #GauriLankesh #ParashuramWaghmare
    ×